மும்பை : மராட்டியத்தில் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தலைமையின் உத்தரவுப்படியே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் செயல்படுவதாகவும் மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்படும் என்றும் ஹுசைன் தல்வாய் கூறினார்.